recent posts...


Monday, November 09, 2009

பாப்புலர் ப்ளாகர் வில்லங்கம்...

எமது நா.ண நா.ண சீரீஸின் அடுத்த வெளியீடு இது.

பதிவர்களின் பாப்புலாரிட்டியை கணக்கிட பல வழிகள் இருக்கிறது.
எவ்ளோ ஃபாலோயர்ஸ் இருக்காக?
எவ்ளோ பின்னூட்டங்கள் வாங்கராக?
எவ்ளோ பேர் பதிவை ரீடரில் வாசிக்கராக?
எவ்ளோ பேரு பதிவுக்கு லிங்க் குடுக்கராக... இப்படி அடுக்கிக்கினே போலாம்...

ஆனா, பிரதானமா எல்லாருக்கும் கண்ணுக்கு தெரியர விஷயம், எவ்ளோ பேரு, இவங்க பதிவுகளை வாசிக்கராக/வாசிச்சிருக்காக என்பதை கட்டம் போட்டு காட்டும் 'ஹிட் கவுண்ட்டர்' அது.

நம்ம நெஜ கவுண்டரை போலவே, இந்த ஹிட் கவுண்ட்டர் கொஞ்சம் வில்லங்கமான விஷயம்.

ஃபாலோயர்ஸ் கணக்கு, திடமா இருக்கும். ஆடாம அசங்காம.
'என் பதிவை இவ்ளோ பேரு, கண்டிப்பா ஃபாலோ பண்றாக. இஸ்கர மாதிரி தலைப்பு வச்சா, கண்டிப்பா வாசிப்பாக'ன்னு அடிச்சு சொல்ற மேட்டரு இது.

நம்ம சுப்பையா வாத்தி, அஸ்ட்ராலஜி சொல்லித் தாரேன்னு, க்ளாஸ் ரூமை ஹவுஸ் ஃபுல்லா வச்சிருக்காரு. 967 ஃபாலோயர்ஸ் இவருக்கு. என் பதிவுக்கு வந்தீங்கன்னா நல்ல காலம் பொறக்கும்னு சொல்லிட்டாரு போல. பயபுள்ளைங்க அத்தன பேரும், அங்க உள்ளேன் ஐயா சொல்லி வச்சிருக்காக. நான் உட்பட :)
இந்த சுபயோக சுபதினத்தில், இந்தப் பதிவை படிக்கும் நீங்களும், வாத்தியாரை ஃபாலோ பண்ணி அவரை 1000 ஃபாலோயர்ஸ் பெற்ற அபூர்வ வாத்தியாக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். அதை நடத்தி வைத்த பெருமை எமக்கே சேரட்டும். ஆயிரமாவது ஃபாலோயருக்கு வைகுண்டா ப்ராப்தி காரண்டியாம், சபைல சொல்லிக்க்கராங்க :)
(இட்லிவடை கூட 766 ஃபாலோயர்ஸ் பெற்றுள்ளது)

ஆனா, சுவாரஸ்யமா எழுதர எல்லாருக்கும், ஆயிரம் ஃபாலோயர்ஸ் இருக்கணும்னு அவசியம் இல்லை.
சில பேரு பதிவுகளை, ரீடரிலோ, ஃபாலோயரிலோ, ஃபேவரைட்டிலோ சேர்த்து வ்ச்சாதான் படிப்பாங்கன்னு இல்லை.
கூகிளோ, இந்துவோ, குமுதமோ, விகடனோ படிக்கர மாதிரி, ஒரு நாளைக்கு ஒரு தபாவாவது, தன்னிச்சையாக போய் எட்டிப் பார்க்க வைக்கும் பதிவுகள் பல உண்டு, நம் மத்தியில்.

ஒரு காலத்தில், செல்லா என்ற பதிவர் இருந்தார். PiTன் ஆரம்ப கால சகா.
லாங் லாங் அகோ, ஸோ லாங் அகோ, அவரு, "ஆ" "ஊ" "ஏ" ன்னு என்ன தலைப்பு வச்சு எழுதினாலும், கட முடான்னு ஆளுங்க போட்டி போட்டுக்கினு அவரு பதிவை சூடாக்குவாங்க.
அது ஒரு தனி நடை. சுவாரஸ்யமா யாரையாவது வம்புக்கு இஸ்துக்கினு, நல்ல பொழுது போக்கு பதிவுகள் எழுதிக்கினு இருப்பாரு. இப்ப ஸைலண்டா ஆயிட்டாரு.

sorry, i digress.

மேட்டருக்கு வாரேன்.

இந்த 'ஹிட் கவுண்ட்டர்' சில சமயங்களில் வேலை செய்வதில்லை. ஓ.சியில் கெடைக்குதேன்னு எதையோ ஒண்ண போட்டு வச்சுடறோம்.
சில சமயங்களில், இவை சரியாக ஓடுவதில்லை.
அதே சமயம், வேறு சில கவுண்டர்கள், சூடு வச்ச மீட்டர் மாதிரி ஓடுது.

histats.comன் ஹிட் கவுண்ட்டர். ஆமை ரகம். (or reality? )
jstracker.comன் ஹிட் கவுண்ட்டர். முயல் வேகம் (or சூடு மீட்டர்?)

சமீபத்தில் ஒரு பதிவு போட்ட போது, எமது இரண்டு ஹிட் கவுண்ட்டர்கள் இப்படி காட்டியது.



23 எங்க இருக்கு, 9 எங்க இருக்கு? கொடுமையாச்சே இது?

histats சொல்லும் 188,708க்கு பதிலா, ஆறு லட்சம் ஹிட்டுன்னு மனசுல வச்சுக்கிட்ட்டு, நாங்களும் ரவுடிதான்னு, ஆறுதல் பட்டுக்க வேண்டியதுதான்.

jstracker.com வாழ்க. histats.com ஒழிக!

உங்க நெலம என்ன? நீங்களும் ரவுடியா?